தற்போதைய செய்தி

கோட்டகுப்பத்தில் சூடு பிடிக்கும் மனு தாக்கல்

whatsapp-image-2016-09-30-at-7-02-39-pm

   கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தல் கள்ம சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  மனுதாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்நு (30-09-2016)  முக்கிய வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்துள்ளார்கள். திமுக சார்பில் போட்டியிடும் ஜெயமூர்த்தி 17-ம் வார்டிலும், முன்னாள் கவுன்சிலர்  பாருக் அவர்கள் 15-ம் வார்டிலும் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார். மற்றும் முன்னாள் தலைவர் பானுமதி 5வார்டிலும் மனுதாக்கல் செய்தார். திமுக  கம்யூனிஸட் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் …

Read More »

தேர்தல் ஜுரத்தில் தகிக்கும் கோட்டகுப்பம்! தேர்தல் களத்தில் எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள் ?

draft-condidate

     தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் வருகையை சாதாரண மக்கள் முதல் பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து அது சம்பந்தமான பேச்சுகளை அதிக அளவில் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. அதன்படி கோட்டகுப்பம் பகுதியிலும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான போச்சுக்கள், டீ கடைகளிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும், பங்க்கடைகளிலும், மூலைக்கு மூலை அதிக அளவில் பேசப்பட்டு …

Read More »

சிரிக்க வைப்பது சர்கஸ் கோமாளிகள் நம்மை பார்த்து சிரிக்க செய்துவிட்டார்கள் கோட்டகுப்பம் கோமாளிகள்!

kottakuppamjoker

நம்மை பார்த்து சிரிக்க செய்துவிட்டார்கள் கோட்டகுப்பம் கோமாளிகள்! கோட்டகுப்பத்தின் வரலாறு பாரம்பரியமானது, சுவாரிசியமானது, சோதனையானது! கோட்டகுப்பத்தின் அடிப்படை வசதிகள் பெறுவதற்கு கடந்த 70 வருடங்களாக நமது முன்னோர்கள், இளைஞர்கள் அவர்களின் சக்திக்கேற்ப பல போராட்டங்கள், பல ஆலோசனை கூட்டங்கள், பல திட்டமிடல்கள், பல தியாகங்கள்  செய்து நமக்கு பெற்றுத் தந்துள்ளார்கள். இன்று நாம் அனுபவிக்கும் அடிப்படை வசதிகளுக்கு அடித்தளம் இட்டது நம் முன்னோர்களின் உண்மையான கவலைகள், தியாகங்கள் பல போராட்டங்களே! …

Read More »

கோட்டகுப்பம் பரகத் நகர் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிக்கு நிதி தாருங்கள்

2015-01-05-15-57-52

கோட்டகுப்பம், பரகத் நகர் பள்ளிவாசல் கடந்த காலங்களில் மக்களின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்டு தொழுகை நடைபெற்று வந்தது, மக்கள்அதிக குடியேறியதால் நோன்பு காலங்களில், வெள்ளிகிழமை ஜூம்ஆ நேரங்களில் தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகமானதால் இடப்பற்றாகுறை ஏற்பட்டது. அதைபோக்கும்வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேல்தளம் கட்டும் பணி தொடங்கப்பட்டு சுமார் 40 லட்சம் மதிப்பில் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதன் மூல்ம்  நோன்பு நாட்களில் பெண்கள் கீழ் தளத்திலும் ஆண்கள் …

Read More »

சின்ன கோட்டகுப்பம் பெண்கள் மதரஸாவிற்கு ஈத்காஹ்வில் வசூல்

cinna-kottakuppam

    சின்ன கோட்டகுப்பம் பிலாலியா மஸ்ஜித் சார்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட தர்பியத்துால் பனாத் பெண்கள் மதரஸாவிற்கு கட்டுமானப் பணிக்காக ஹஜ் பெருநாள் தொகையில் ஈத்கா மைதனாத்தில் பொது வசூல் செய்ய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் அனுமதித்துள்ளது.     கட்டிடபணி முழுமைபெற தாராளமாக நிதி வழங்குங்கள் என்று சின்னகோட்டகுப்பம் பிலாலியா பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறார்கள்.

Read More »

ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு

Haj Eid Time

  கோட்டகுப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை வழக்கமாக காலை 9-00 மணிக்கு நடைபெறும். குர்பானி கொடுப்பவர்களுக்கு நேரம் குறைவாக இருப்பதால் தொழுகை நேரத்தை முன்னதாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் சரியாக காலை 8-30 மணிக்கு நடைபெறும் என்றும். ஜமாத்தார்கள் காலை 7-45 மணிக்கு பள்ளிவாசலுக்கு வரும்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More »

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பைத்துல்மால் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

wp-image-1537442580jpg.jpeg

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பைத்துல் மால் சார்பில் 10 மற்றும் 12 வகுப்பில் 75%மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கதொகையும் பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பில் கோட்டகுப்பம் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு முறையே 10 ஆயிரம் 5 ஆயிரம் 3 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. [gallery columns=”3″ ids=”1405,1408,1406,1404,1401,1402,1400,1399,1398,1397″]

Read More »

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழுப்புரம் மாவட்டம் (கி) நிர்வாகிகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

vill

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழுப்புரம் மாவட்டம் (கி) நிர்வாகிகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்30.08.2016 இன்று விழுப்புரத்தில் மாவட்ட பொருளாளர் ஹாஜி வீ .ஆர்.முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. கட்சியின் வளர்ச்சிக்கு வார்டுகள் தோறும் நிர்வாகிகள் நியமித்து தேர்தல் பணியாற்றுவது . உள்ளாட்சி தேர்தலில் தோழமை கட்சியுடன் இணைந்து நகராட்சி ,பேரூராட்சி ,ஊராட்சி ,வார்டுகளில் …

Read More »

பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளில் பாங்கு அழைப்பு பணி தொடர உத்தரவிடவும் தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

louderspeaker

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தமிழக முதல்வர் அவர்களுக்கு கொடுத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுது வணங்கி வருகின்றனர். இத்தொழுiக்கான அழைப்பு (பாங்கு) பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து வேளை கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் செய்யப்படுகிறது. ஒரு வேளைக்கு இரண்டு நிமிடங்கள் என்றால் ஐந்து வேளைக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே தினமும் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைக்கப்படுகின்றன. …

Read More »

புதிதாய் – வேகமாய் – நமது இணையதளம்

IUML Kottakuppam

15-08-2011 அன்று மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டட நமது www.iumlkottakuppam.com இணையதளம், ஆறாம் ஆண்டில் புதிதாய் மிக வேகமாய் இன்று புத்துணர்வு பெற்றுள்ளது. தொடங்கப்பட்ட நாள் முதல் கோட்டகுப்பம் மக்களின் அதீத ஆதரவும். தாய்ச்சபை தங்கங்களின் ஆதரவும். வெளிநாடு வாழ் கோட்டகுப்பம் மக்களின் ஒத்துழைப்பும் அதிக அளவில் நமக்கு கிடைத்துக்கொண்டே இருந்துள்ளது. தொடக்க காலம் தொட்டு இதுநாள்வரை மக்களின் ஆதரவு அதிக அளவில் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நமது இணையதளத்தை தினமும் …

Read More »

வழக்கத்தை மீறிய உற்சாகம்-கோட்டகுப்பம் பெருநாள் தொழுகை!

20160707 082522

ஈதுல் பித்ர் என்னும் ஈகை பெருநாள் கோட்டகுப்பத்தில் வழக்கத்தை காட்டிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பெருநாள் பிறை அறிவதில் ஏற்பட்ட கருத்து மாற்றுக்களை புறந்தள்ளிவிட்டு கோட்டகுப்பம் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று (07-07-2016) பெருநாள் கொண்டாடி வருகிறார்கள். அதன் தொடக்கமாக பெருநாள் தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று இரவு 7-00 மணியளவில் மழை பொழிய ஆரம்பித்தவுடன் மக்கள் மனதில் சிறிது கவலை ஏற்பட்டது. பெருநாள் தொழுகை ஈத்காஹ, மைதானத்தில் …

Read More »

Pin It on Pinterest

Share This
error: Content is protected !!